மகாராஷ்டிரா மாநிலம் ரைகடில் உள்ள கடைக்கு முன்பாக ஒரு தம்பதியினர் தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று பொருள்களை வாங்கியுள்ளனர். அதன் பின்பு அந்த தம்பதியினர் பைக்கில் ஏறி வாகனத்தை ரிவர்ஸ் எடுத்துள்ளனர். அப்போது அங்கு இருந்து அதிவேகமாக வந்த கார், அந்த தம்பதியின் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டனர்.

அதன் பிறகு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், கடையின் முன்பிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் காரை ஓட்டியது ஒரு பெண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.