திருவொற்றியூர் ராஜாஜி நகர் உள்ள பகுதியில் அமிர்தவர்ஷினி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி தனது வீட்டிற்கு அருகில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு தனது தோழி வீட்டிற்கு சென்று தாமதமாக வீடு திரும்பியுள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அமிர்தவர்ஷினி, தாய் கடைக்கு சென்ற பிறகு, தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின் வீடு திரும்பிய தாய் தனது மகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அமிர்தவர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.