ஆந்திராவின் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் 2 சிறுமிகளுடன் இளைஞருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான திருமண அழைப்பிதழ் பத்திரிக்கை சமூக வலைதளத்தில் தொடங்கியது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், திருமணம் நடைபெற உள்ள 2 சிறுமிகளும் மைனர் என்று தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று உடனடியாக திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது பத்திரிக்கை அச்சடித்து உறவினர்கள் எல்லோரும் மண்டபத்திற்கு வந்து விட்டனர் என இரு வீட்டாரும் அதிகாரங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.