
பாகிஸ்தானில் நௌமன் ஹாசன் என்பவர் புலி மீது அமர்ந்து சவாரி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஒருவர் புலி மீது சவாரி செய்து வருகிறார். மேலும் பின்னணியில் ஒரு கூண்டில் ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் உள்ளன.
இந்த வீடியோ சுமார் 3 லட்சம் பார்வைகளை கடந்துள்ள நிலையில், அதை விமர்சிக்கும் நெட்டிசன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பொது பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
வீடியோவை விமர்சிப்பவர்கள் மத்தியில், விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் அக்கறை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. விலங்குகளை இப்படி பயிற்சி பயன்படுத்துவது அவற்றின் நலனுக்கு பாதகமாக இருக்கும் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram