Youtube என்பது தனிமனிதர்கள் தங்களது தனிப்பட்ட திறமைகளை காட்டுவதற்கும், அதை மேம்படுத்துவதற்கும், அதே திறமையை மேம்படுத்த விரும்பும் பிறருக்கு  கற்றுக் கொடுப்பதற்குமான ஒரு பிளாட்பார்ம். இது நூலகம் போன்றது. நூலகத்தில் சென்று நமக்கு தேவையான புத்தகம் எங்கே இருக்கிறது என்பதை நாம் தேடி சென்று படிப்போம். அதிலிருந்து தேவையான தகவல்களை நாம் பெற்றுக்கொள்வோம்.

அதேபோல, யூடியூப்பில் நமக்கு தேவையான தகவல்களை நாம் தேடி பெற்றுக்கொள்கிறோம். அதை தருபவர்களை நாம் பின்பற்றுகிறோம். ஆனால் தற்போது youtube சில காலமாக கார்ப்பரேட் கையில் சென்று கொண்டிருப்பதாகவும், தனிமனிதர்களின் பிளாட்பார்மாக இருப்பது குறைந்து வருவதாகவும் தொடர்ச்சியாக பல கருத்துக்கள் பரவி வந்தன. அதேபோல தனிமனித youtube ற்கும்  கார்ப்பரேட் யூடியூபர்களுக்கும் இடையே பல சண்டைகளும் நடுவில் நடந்தது உண்டு. அந்த வகையில்,

இந்தியாவைச் சேர்ந்த பிரபல youtube சேனல் நிறுவனம் ஒன்று வெளிநாட்டைச் சேர்ந்த pewdipie என்னும் தனிமனித யூ டியூப் ருடன் போட்டியிட்டது. யார் அதிகம் சந்தாதாரர்களை வைத்துள்ளார்கள் என்ற இந்த போட்டியில், அந்த தருணத்தில் இந்திய youtube நிறுவனம் வென்றது. ஆனால், அந்த சமயத்தில் இதை தனிப்பட்ட இரண்டு சேனல்களுக்கு இடையேயான போட்டியாக கருதாமல், அதை இந்தியர்களுக்கான கௌரவம் , தேசப்பற்று உள்ளிட்டவற்றை உள்ளடக்கி அதை வேறு ஒரு பிரச்சனையாக சமூக வலைதளத்தில் சித்தரித்து அது உலக அளவில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதே பிரச்சனை youtube நிறுவனம் தற்போது மிஸ்டர் பீஸ்ட் எனப்படும் மிகப் பிரபலமான யூடியூப்பருடன் போட்டியில் இறங்கியுள்ளது. இதன்படி, யார் அதிக சந்தாதாரர்களை பெற்று   உலக அளவில்  நம்பர் ஒன் யூடியூப் ராக இருக்கிறார் என்பதுதான் போட்டியே, அதில் இந்திய யூ டியூப் நிறுவனத்தை வென்று தனிமனித யுடியூப்ரான மிஸ்டர் பீஸ்ட் அதிக சந்தாதாரர்களை  பெற்றுள்ளார். இதை தமிழகத்தில் உள்ள யூடியூப் சேனல் ஒன்று அமோகமாக கொண்டாடி தீர்த்து வருகிறது.

A2D எனப்படும் அந்த சேனல் பிற பிரபல youtuber களான  மதன் கௌரி, விஜே சித்து,  இர்ஃபான்  உள்ளிட்ட யூட்யூபர்களை இணைத்து சென்னையின் முக்கியமான ஐந்து இடங்களில் பெரிய அளவிலான கட்அவுட் ( பில் போர்டு) வைத்து மிஸ்டர் பீஸ்ட் அவர்களின் வெற்றியை கொண்டாடி வருகிறது.

அதேபோல், இந்த வீடியோவிற்கு கீழ் மிஸ்டர் பீஸ்ட் அவர்கள் கமெண்ட் செய்தால் அவருடன் வீடியோ எடுக்க முயற்சிப்போம் எனவும் தெரிவித்திருந்தது. அதேபோல் இந்த வீடியோவை மிஸ்டர் பீஸ்ட் அவர்களுக்கு டேக் செய்து தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சப்ஸ்கிரைப்ர்களில் ஒருவருக்கு ஒரு PC கம்ப்யூட்டர்  இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்ததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலர் அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இது உலக அளவில் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் அவர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அவர் நேற்றைய தினம்  பதிவிடப்பட்ட அந்த கட்அவுட் வீடியோவிற்கு கீழ் நன்றி தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈரத்துள்ளது.