
ரயில் பயணம் செய்பவர்களுக்கு ரயிலில் பல்வேறு வசதிகள் இலவசமாக கிடைக்கின்றது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆம், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பேருந்து, விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயில் பயணங்களை மிகவும் விரும்புகின்றனர். அதற்கு காரணம் ரயிலில் இருக்கும் வசதிகள், டிக்கெட்டின் விலை, வேகமாகவும், பாதுகாப்பாகவும் செல்லலாம். அதாவது ரயில்களில் ஏசி 1, ஏசி 2 மற்றும் ஏசி 3 பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு இலவசமாக போர்வை, தலையணை, 2 பெட்சீட்கள் மற்றும் துண்டு வழங்கப்படுகிறது. இருப்பினும் கரிப் ரத் எக்ஸ்பிரஸில் படுக்கை வசதிக்காக 25 ரூபாய் செலுத்த வேண்டும், மற்ற ரயில்களில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
நீங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, உங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் இலவசமாக முதலுதவி வழங்கப்படும். அதன் பின் நிலைமை மோசமாக இருந்தால் மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி போன்ற ப்ரீமியம் ரயில்களில் பயணம் செய்யும்போது உங்கள் பயணம் 2 மணி நேரத்திற்கும் தாமதமாக இருந்தால் ரயில் நிறுவனம் உங்களுக்கு இலவசமாக உறவு வழங்குகிறது. ரயில் நிலையங்களில் பயனர்கள் பல மணி நேரம் பிளாட்பார்மில் தங்குவது வழக்கம். ஆனால் நீங்கள் அங்குள்ள ஏசி அல்லது ஏசி அல்லாத காத்திருப்பு வளாகத்தில் தங்கிக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் டிரெயின் டிக்கெட் காட்டினால் மட்டுமே போதும். அதோடு முக்கியமான ரயில் நிலையங்களில் லாக்கர் அறைகளும் உள்ளது. அங்கு பயணிகள் தங்கள் பொருட்களை வைத்துக் கொள்ளலாம். அது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இதற்கு சிறிதளவு கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.