விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா இருந்தார். இதையடுத்து அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யுடன் ஆதவ்  அர்ஜுனா கலந்து கொண்டார். அப்போது அரசியல் பேசக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தும், அவர் அரசியலை குறித்து பேசியதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 6 மாத காலம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த ஆதவ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்  தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசினார் என்று பல்வேறு தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அவர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து தேர்தல் வியூக பொதுச்செயலாளர் என்ற பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தவெகவில் இணைய என்ன காரணம் என்பதை குறித்து விளக்கம் அளித்த ஆதவ் கூறியதாவது, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட 5 நாயர்களை கொள்கை தலைவர்களாக கொண்ட தவெகவில் மக்களுக்கான அரசியலை முன்வைத்து கரம் கோர்த்துள்ளதாக கூறினார். சமத்துவ சமூக நீதிக் கொள்கைகளின் அடிப்படையில் என்றும் மக்களோடு பயணிப்பேன் எனவும் அவர் உறுதிப்பட கூறினார். மேலும் இந்த மாபெரும் வரலாற்று கடமைக்கான பயணத்தில் தனக்கு இந்த பொறுப்பு வழங்கிய விஜய்க்கும் நன்றி தெரிவித்துள்ளார்.