
கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் பகுதியில் நட்சத்திர உணவு விடுதிகளுக்கு பேக்கரி உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணியிலிருந்த போது ஏ.சி-யில் இருந்து கசிவு ஏற்பட்டு வாயு அறையில் பரவியுள்ளது.
இதனால் தலைசுற்று மற்றும் மயக்கம் அடைந்து பல பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது