
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தற்காலிக தூய்மை பணியாளராக நாகரத்தினம், ஈஸ்வரி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மதியம் 3.45 மணிக்கு நகராட்சியில் இருந்து கற்பக நகர் பகுதிக்கு வேலைக்காக புறப்பட்டனர். இதில் திருமங்கலம் தேவர் சிலை அருகே விமான நிலைய ரோட்டில் டூவீலரில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு இருவரும் சென்றுள்ளனர். அவர்களை ஏற்றி சென்ற டூவீலர் 100 அடி கூட தாண்டாத நிலையில் பள்ளம் காரணமாக தடுமாறியதில் ஓட்டி வந்த நபர் இடது புறமாகவும், இரு பெண்களும் வலது புறமாகவும் கீழே கவிழ்ந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கனரக லாரி அவர்கள் மீது ஏறியதில் இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியாகி விட்டனர்.
இதில் டூவீலரில் ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து லாரி டிரைவரை பற்றி விசாரணை நடத்தியதில் அவர் திருச்சி துறையூர் ஜெயப்பிரகாஷ் என்பது தெரிய வந்தது. இதில் லாரி ஓட்டுனரும் தப்பி ஓடி விட்ட நிலையில் திருமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமங்கலம் விமான நிலைய ரோட்டிலுள்ள கிராஸ்ங்கில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அதற்கான மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யாமல் உள்ளது. இந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் பயன்படுத்திகின்றனர். மேலும் இங்கு மேடு, பள்ளமாகவும் சேரும் சகதிமாகவும் உள்ளதால் அவ்வபோது சிறு சிறு விபத்துகளும் நடக்கின்றன. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் இந்த இரு உயிர்களை பழிவாங்கி விட்டது நான் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.