
சேலம் மாவட்டத்திலுள்ள பனமரத்துப்பட்டி பகுதியில் சென்னன் (65) என் பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா (38) என்ற மகள் இருந்துள்ளார். இவரது மகள் சுதாவிற்கு திருமணம் ஆகி வெங்கடாசலம் என்ற கணவரும் விஷ்ணு (12) என்ற மகனும் இருந்துள்ளார்.
தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் சுதா தனது மகன் விஷ்ணுவை தனது தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை சென்றுள்ளனர். இவர்கள் இரு சக்கர வாகனத்தில் சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிரே வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் சுதா விஷ்ணு சென்னன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்த தகவலின் அடிப்படையில் மல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேரின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாரி ஓட்டுனர் சுந்தரராஜர் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.