இன்று தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு ஏராளமானோர் இவருக்கு அஞ்சலி செலுத்த செல்கின்றனர். இதனால் அங்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் உள்ளனர். இந்நிலையில் குருபூஜையில் கலந்து கொள்ள நாமக்கல்லில் இருந்து பரமக்குடிக்கு 9பேர் காரில் வந்துள்ளனர். அப்போது திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் படையப்பா என்பவரின் இரண்டு கால்களும் முறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் 9பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் படையப்பா என்பவரின் ஒரு கால் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.