கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கொட்டிலேத்தியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பெருமாள் (39) தனது வீட்டில் மது பாட்டிலை வாங்கி வைத்திருந்தார். கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி, மதுவை குடிப்பதற்காக சென்ற இவர், அதே இடத்தில் வைத்திருந்த ஆசிட்டை தவறுதலாக மது என நினைத்து குடித்துள்ளார். இதனால் உடனே வயிற்று வலி ஏற்பட்டு துடிதுடித்தார்.

வலியால் அவதிப்பட்டு துடித்தபோது, அவரின் குடும்பத்தினர் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிகழ்வு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.