
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரும், இவரது மனைவி ஷாலினியும் முதல் முதலாக ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இந்நிலையில் படம் ஷூட்டிங் போது ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, அஜித் அவரை பாசமாக பார்த்துக் கொண்டார். இதனால் ஷாலினிக்கு, அஜித் மீது காதல் உருவானது.
இதையொட்டி கடந்த 2000 ஆண்டில் பெற்றோர் சமூகத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி ஷாலினி அவரது 44வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாளுக்கு நடிகர் அஜித் குமார், ஷாலினிக்கு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். ரூபாய் 69 லட்சம் மதிப்புள்ள லெக்சஸ் காரை தனது மனைவிக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும் லெக்சஸ் காரின் முன்பு ஷாலினி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.