
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருதுகள் வழங்கப்படும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் போன்ற பலர் பங்கேற்றனர். விருது பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது மற்றும் சான்றிதழை கொடுத்து கவுரவித்தார்.
அதன்படி தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அதேபோன்று செஃப் தாமுவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதனை அவர்கள் குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.