
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி எப்படி கமிட்டானார் என்பது குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது ஜவான் பட ஹீரோயின் நயன்தாராவின் திருமணத்திற்கு ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் சென்றிருந்தனர். அப்போது ஷாருக்கானிடம் சென்று விஜய் சேதுபதி உங்களுக்கு நான் வில்லனாக நடிக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதை கேட்ட ஷாருக்கான் உடனே இயக்குனர் அட்லீயிடம் பேசி விஜய் சேதுபதியை ஜவான் படத்தில் வில்லனாக கமிட் செய்துள்ளார். மேலும் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.