
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அதன் பின் நடிகர் விஜயுடன் சேர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து சேர்ந்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்த யோகி பாபு, விஜய் சேதுபதி, பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது பட குழு அறிவித்துள்ளது. அதன்படி ஜவான் படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பதான் திரைப்படம் ஆயிரம் கோடி வரை வசூல் சாதனை புரிந்ததால் ஜவான் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.