
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா அண்மையில் தன்னுடைய மனைவி ஜோதிகா, மகள், தந்தை சிவக்குமார் உட்பட குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியகத்துக்கு சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. இந்நிலையில் நடிகர் சூர்யா எதற்காக குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியத்திற்கு சென்றார் என்ற காரணத்தை தற்போது பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதாவது சூர்யா தந்தை சிவகுமாருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் மும்பைக்கு குடும்பத்துடன் குறியேறி விட்டார். இதனால் சூர்யா இனி தமிழ் படங்களை விட ஹிந்தி படங்களில் தான் அதிக கவனம் செலுத்துவார் என்று தகவல்கள் பரவிய நிலையில், அந்த அவப்பெயரை மாற்றுவதற்காக தான் குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்றதாக பயில்வான் கூறியுள்ளார்.
கீழடி அருங்காட்சியத்திற்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் சூர்யா குடும்பத்திற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. சூர்யா சென்றிருந்த அதே நாளில் மாணவ மாணவிகள் வெயிலில் கால் கடுக்க கீழடி அருங்காட்சியகத்திற்கு வெளியே காத்துக் கிடந்ததாகவும் பயில்வான் கூறியுள்ளார். இதேபோன்று எம்பி சு. வெங்கடேசனுக்கு மட்டும் நடிகர் சூர்யா குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியத்திற்கு வருவது எப்படி தெரியும் என்றும் பயில்வான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பயில்வான் ரங்கநாதனின் இந்த கருத்துக்கு வழக்கம் போல் சூர்யா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.