தளபதி விஜய் எதைத் தொட்டாலும் வெற்றி தான் என்று விஜய்க்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகர் பெஞ்சமின். தவெக தலைவர் விஜய்யை பற்றி நடிகர் பெஞ்சமின் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். அதில் அவர் ” என்னை சினிமாவில் வாழ வைத்த தெய்வம் தலைவர் விஜய். திருப்பாச்சி திரைப்படம் மூலம் திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தவர். சாதாரணமாக ஒரு விஷயத்தை அவர் கையில் எடுக்க மாட்டார்.

உச்சத்தில் இருக்கும் நடிகர் நடிப்பதை விட்டு பொதுவாக வருகிறார் என்றால் அவருக்கு பின்பலம் மிகச் சரியாக இருக்கிறது. அதோடு தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது. சினிமாவில் எப்படி வென்றாரோ அதை போல் அரசியலிலும் வெல்வார் என்பது என்னுடைய கருத்து” என அவர் கூறியுள்ளார். மேலும் எம்ஜிஆருக்கு பிறகு குழந்தைகளின் மனதில் இடம் பிடித்த ஒரே நடிகர் விஜய் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.