தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நடிகை வனிதா தற்போது தனக்கு அரிய வகை நோய் இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதாவது ஒரு பேட்டியில் தனக்கு கிளாஸ்ட்டோரோஃபியோ என்ற நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் காரணமாக தன்னால் சிறிய அறை, லிப்ட் மற்றும் கழிவறை போன்ற இடங்களில் அதிக நேரத்தை செலவழிக்க முடியாது என வனிதா வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் இந்த பிரச்சனையை தான் சந்தித்ததாகவும் வனிதா கூறியுள்ளார்.