
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வீடியோக்களை பதிவு செய்து youtube மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்கள். பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்தி பிரபலமாகி வருகிறார்கள்.
இந்நிலையில் யூடியூபில் விளம்பரங்கள் வருவதை தடுக்க ad block பயன்படுத்துபவர்களுக்கு youtube எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் மூன்று வீடியோக்களுக்கு பிறகு பயனர்கள் வீடியோக்களை பார்க்க இயலாது என்று எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்படுகிறது. மேலும் விளம்பரங்களை விரும்பவில்லை என்றால் பிரிமியத்திற்கான குழுவில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.