
நாம் டைப் செய்யாமலேயே WhatsApp-ல் செய்திகளை அனுப்ப இயலும். அதற்காக நாம் ஆண்ட்ராய்டு போனில் கூகுள் அசிஸ்டண்ட்டையும், ஐபோனில் சிரி ஆப்ஸையும் ஆக்டிவேட் செய்தால் போதும். எதை அனுப்புவது என பதிவு செய்து, யாருக்கு அனுப்பவேண்டும் என்று கூறினால் போதுமானது.
WhatsApp பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு நாளில் பெரும்பாலான செய்திகள் வருகிறது. அதில் நாம் விரும்பும் செய்தியை (அ) முக்கிய செய்தியை தேடி கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம் ஆகும். எனினும் இதற்கு ஒரு புது அம்சம் இருக்கிறது. அதாவது, ஸ்டார் ஆப்ஷன் ஆகும். எந்த செய்தியை சேமிக்க வேண்டுமோ அதை அழுத்திப் பிடித்து மேலே உள்ள ஸ்டார் ஆப்ஷனை க்ளிக் செய்தால் அது முக்கிய பட்டியலில் சேகரிக்கப்படும்.
மீண்டுமாக அதை பார்க்க வேண்டுமெனில் WhatsApp-ன் வலது புறம் மேலே உள்ள 3 புள்ளியை க்ளிக் செய்தால் அதில் starred message என இருக்கும். அதை கிளிக் செய்வதன் மூலம் நாம் சேமித்த வைத்த செய்திகளை பார்க்கலாம். இதற்கிடையில் மொபைல் ஸ்டோரேஜ் போதுமானதாக இல்லை எனில் “ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ரன் அவுட்” எனும் நோட்டிபிகேஷன் வரும்.
WhatsApp செட்டிங்கிலுள்ள ஸ்டோரேஜ் மற்றும் டேட்டாவை கிளிக் செய்ததை அடுத்து அளவு வாரியாக கோப்புகளின் பட்டியல் தோன்றும். Manage storage என்பதை கிளிக் செய்தால் முதலில் 5 MB அளவுள்ள கோப்புகள் காண்பிக்கப்படும். தேவையற்ற கோப்புகளை நீக்குவதன் வாயிலாக ஸ்பேஸ் அதிகரிக்கலாம். WhatsApp-ஐ திறக்காமலேயே அச்செய்தியை நாம் படிக்க முடியும்.
கணினி (அ) லேப்டாப்பில் வாட்ஸ்அப் வெப் ஓபன் செய்துகொள்ள வேண்டும். அதன்பின் எந்த செய்தியை படிக்க வேண்டுமோ அதன் மேல் மவுஸ் கர்சரை வைக்க வேண்டும். சிறிது நேரம் வைத்து இருந்தால், அவர்கள் அனுப்பிய செய்திகளை பார்க்க இயலும். அதே நேரம் நாம் படித்தது அவர்களுக்குத் தெரியாது.