
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவை அதானி குழுமம் ஏற்பதாக கௌதம் அதானி தற்போது அறிவித்துள்ளார். மேலும் இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு துணை நிற்பது நம்முடைய அனைவரின் கடமை என்றும் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.