டெல்லியில் உள்ள குருகிராமில் ரவீந்திரன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊனமுற்றவர் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவருடைய தாயார் ரோஷ்னி தேவி (70). இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தாயாரிடம் மது வாங்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இருப்பினும் ரோஷ்னி தேவி பணம் குடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த ரவீந்தர் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு தாக்கினார்.

இதில்  ரோஷ்னி தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு ரவிந்தர் தனது சகோதரியான கபூலுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து பதறிப்போய் ஓடி வந்த கபூல் பார்த்தபோது தாயார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கபூல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரவீந்தரை கைது செய்தனர்.  அதன் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.