இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய கார் வகைகளுக்கு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா டிகோர் மற்றும் டாடா டியோகோ ஆகிய கார் வகைகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இந்த தள்ளுபடிகள் அனைத்தும் 2024 ஆம் ஆண்டில் அந்நிறுவனம் தயாரித்த கார்களுக்கு மட்டும் டீலர்ஷிப் மூலமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 2023 ஆம் ஆண்டு மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிகபட்சமாக அனைத்து கார்களுக்கும் 40,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி டாடா டியோகோ மாடல்களுக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு டாடா டிகோர் மாடல்களில் XZ+, XM மாடல்களுக்கு 40 ஆயிரம் வரை தள்ளுபடியும் மற்ற வேரியண்டுகளுக்கு 30 ஆயிரம் வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டாடா அல்ட்ராஸ் மாடல்களுக்கு 20,000 முதல் 35 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாடா நெக்ஸான் மாடல்களுக்கு 15,000 வரையிலான எக்சேஞ்ச் மற்றும் ஸ்கிராபேஜ் சலுகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிகள் அனைத்தும் வெவ்வேறு நகரங்களில் பல்வேறு விதமாக கிடைக்கும் என்பதால் இது தொடர்பாக அருகில் உள்ள ஷோரூம்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.