டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு மழைக்கு அரவிந்த் கெஜ்ரிஜ்வால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் தன் பதவியை  ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில் சமீபத்தில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி பொறுப்பேற்பார் என்று அக்கட்சி நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் அதிசய இன்று புதிய முதல்வராக பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது டெல்லியில் முதல்வராக அவர் பதவியேற்றுள்ளார். மேலும் டெல்லியின் 8-வது முதல்வர் அதிஷி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.