அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன், மதுரை மாநாட்டில் பேசியபோது,இந்த கூட்டத்தை பார்க்கின்றபோது சில எதிரிகளுக்கும் –  இன்றைக்கு துரோகிகளுக்கு தூக்கமே வராது. இந்த நகரம் தூங்கா நகரம் இந்த தூங்கா நகரத்தில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டை பார்த்து எதிரிகளுக்கும் – துரோகிகளுக்கும் தூங்கவே முடியாது. மிக பிரம்மாண்டமான மாநாடு இது.

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் ? அந்த காலத்தில் மதுரைக்கு என்று பல்வேறு பெருமைகள் உண்டு. வரலாற்று சிறப்புகள் உண்டு. அதேபோல இன்றைக்கு சங்க இலக்கியங்களில் மதுரை பற்றி குறிப்பிடாத சங்க இலக்கியங்களை கிடையாது. ‘மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை’ என்று சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட அந்த பெருமைமிக்க மதுரை.

அப்படிப்பட்ட பெருமைமிகு மதுரைக்கு மேலும் ஒரு பெருமை இந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற்றுள்ள கழகத்தினுடைய வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு. இந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறுகின்ற இந்த மாநாட்டிற்கு பின்பு இனிமேல் மதுரைக்கு என்று எழுதப்படுகின்ற அனைத்து சரித்திரங்களிலும் – வரலாற்றுகளிலும் மதுரைக்கு என்று மதுரையை குறிப்பிடுகின்ற போது இந்த மாநாட்டை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

அந்த அளவிற்கு இது வரலாற்று சிறப்புமிக்க மாநாடு இந்த மாநாட்டில் கூடியிருக்கின்ற கூட்டத்தை பார்த்தால் இதுவரை யாரும் இப்படிப்பட்ட மாநாட்டை நடத்தியதும் இல்லை. இனிமேலும் நடத்த முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக்கூடிய  சாதனை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இன்றைக்கு ஒட்டுமொத்தமாக இந்த அளவிற்கு கூட்டம் கூடி இருக்கிறது என்று சொன்னால் ?

அருமை அண்ணன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பின்பு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பின்பு நம்மை வழி நடத்துவதற்கு ஏற்ற ஒரு தகுதியான தலைவர் ஆளுமை மிக்க தலைவர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகின்ற வகையிலே அதற்காக இந்த தலைமைக்கு வலிமை சேர்க்கின்ற வகையிலே ஒட்டுமொத்த தமிழகமும் இங்கே திரண்டு வந்திருக்கிறது என தெரிவித்தார்.