
ADMK-ல் ஒரு லட்சம் துரோகிகள் உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். பதவி வெறியால் ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அதனை மீண்டுமாக ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறினார்.
மேலும் அதிமுகவில் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் இருப்பதாக இபிஎஸ் கூறியதன் மூலம், அவரே கட்சியில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக ஒப்புக்கொண்டு விட்டார். சொந்த பிரச்சனையால் சில பேர் அமமுகவிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்சி மாறுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.