அதிமுகவை இபிஎஸ் சாதி கட்சியாக மாற்றிவிட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றிய அவர் மேலும் கூறியதாவது, அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களே இபிஎஸ்-க்கு எதிராக உள்ளனர்.

அதனால் தான் மதுரை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் இபிஎஸ்ஐ பார்த்ததும் துரோகத்தின் அடையாளம் என முழக்கமிட்டுள்ளார். இதேபோன்று தமிழகம் முழுவதும் இபிஎஸ்-க்கு எதிர்ப்பு வரும். மேலும் EPS போகும் இடமெல்லாம் எதிர்ப்பு எழும். அவருக்கு மக்கள் இடையே இருக்கும் எதிர்ப்பின் வெளிப்பாடு தான் இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளது என்று மருது அழகுராஜ் கூறியுள்ளார்.