
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், DMK மோசடியான தேர்தல் அறிக்கையை 2021 சட்டமன்ற தேர்தலில் அவர்கள் தயாரித்து, அதன் அடிப்படையில் மக்கள் தற்காலிகமாக நம்புங்க, நம்பி வாக்களிச்சாங்க. ஆனால் இன்னைக்கு மக்கள் பொய்யான வாக்குறுதிகள், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் என தெரிந்து, முழுமையாக தெளிவு பெற்றுட்டாங்க.
இனி எந்த விதமான கிளுகிளுப்பு காட்டி குழந்தைகளை ஏமாற்றுவது மாதிரி தமிழ்நாட்டு மக்களை திமுக எந்த காலத்திலும் ஏமாற்ற முடியாது . அதனால எங்களுடைய தேர்தல் அறிக்கை பெரிய சூப்பர் ஹீரோவா தமிழ்நாட்டில் இருக்கும். மாநிலத்தினுடைய நலன் என்ற அடிப்படையில் முழுமையான அளவுக்கு தேர்தலை சிந்திப்போம்.
ஒரு உதாரணத்தை சொல்கிறேன்… காவிரி நதி நீர் பிரச்சனையில் முழுமையான அளவுக்கு, பாராளுமன்றத்தையே ஸ்தம்பித்து… அந்த உரிமையை பெற்று கொடுத்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம். அப்போ எங்களால் முடியும். 40 நமது நமதே, நாடும் நமதே என பேசினார்.