
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நீட் விலக்கு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக கூறி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி அதிமுக செயற்குழு – பொதுகுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்காத திமுக அரசை கண்டித்து விமர்சனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபுகளை பின்பற்றவில்லை என்று கூறி தீர்மானம்.
வீட்டு வரி மின் கட்டணம் உயர்வை கண்டித்து தீர்மானம் சொத்து வரி வீட்டு வரி மின் கட்டண உயர்வை கண்டித்து தீர்மானம்.
சட்ட ஒழுங்கு சீரழிவிற்கு திமுகவின் மக்கள் உடைய போக்குக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தவறிய மக்கள் நல்வாழ்வுத் துறையை கண்டித்து தீர்மானம்.
ஊழல் ஆட்சி நடத்தும் பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தீர்மானம்.
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய திமுக அரசை அரசுக்கு வலியுறுத்தல்.
நாடாளுமன்ற தேர்தலில் புதுவை மற்றும் தமிழகம் என 40 தொகுதியிலும் வெற்றி பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் வழக்காடு முறையாக தமிழ் மொழியை கொண்டுவர அதிமுக வலியுறுத்தல்