
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அதிமுக கூட்டணி நிபந்தனம் காரணமாக அவர் மாற்றப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றது. இதையடுத்து பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதற்கு இடையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம் செய்யப்படுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் அண்ணாமலை ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார்.
பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் அவர் இமயமலை சென்று அங்குள்ள ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. நடிகர் ரஜினிகாந்த் அவ்வபோது இம்மலைக்கு சென்று பாபாஜி குகையில் தியானம் செய்வது வழக்கம். அண்ணாமலையும், ரஜினியின் நண்பரும் இணைந்து பாபா முத்திரை எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. இவர் தனது ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.