மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சிவா(32) மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர் நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்னே இறந்ததால், அவரது மகனை பாப்பிநாயக்கம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மங்கல்ரேவைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவரை சிவா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

இதனால் சிவாவுக்கும், முதல் மனைவியின் குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பாப்பிநாயக்கன்பட்டியில் சக காவல்துறையினர் ஒருவரின் இல்ல விழாவிற்கு சிவா அவரது இரண்டாவது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரது முதல் மனைவியின் சகோதரர் அர்ஜுனன் இவர்கள் சென்ற டூவீலரை கீழே தள்ளி சிவாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.