
பஞ்சாப் மாநிலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூடியூபர் தலையில் அணியும் தர்பான் வாங்க கடைக்கு சென்றபோது கடைக்காரர் கூறிய வார்த்தைகளும், யூடியூபர் தர்பான் அணிந்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த யூடியூபர் லூக் என்பவர் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்று பயணத்திற்காக சென்றிருந்தார். அப்போது ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தநிலையில் அருகே வந்த ஒருவரிடம் தனக்கு தர்பான் வாங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
அவர் லூக்கை கடைக்கு அழைத்து சென்று நிலையில் கடைக்காரர் அவருக்கு வெவ்வேறு நிறங்களில் தர்பான்கள் காட்டினார். அதில் லூக் நீல நிறத்தை தேர்ந்தெடுத்த நிலையில் கடைக்காரர் அவருக்கு தர்பானை அவரது தலையில் கட்டினார். அப்போது லூக் தர்பான் ஆண்கள் மட்டும் தான் அணிவார்களா? என்று கேட்டதற்கு பெண்களும் அணிவார்கள் என பதிலளித்தார். பின்னர் கடைக்காரர் “தர்பான் கட்டிய பிறகு கண்டிப்பாக புகை பிடிக்கக் கூடாது…மது அருந்தக்கூடாது” என்று கூறினார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
அவருடைய அந்த வார்த்தைகள் சீக்கிய மதத்தினை மதிக்கும் மனப்பான்மையை காட்டும் விதமாக இருந்தது. இதைத் தொடர்ந்து லூக் கடையில் நடந்த இந்த நிகழ்வை “இந்தியாவில் 5 டாலர் தர்பான்” என்னும் தலைப்பில் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில் பலவிதமான பாராட்டுகளை பெற்றுள்ளது. அதில் “தர்பான் என்றால் மரியாதை. அதனை கட்டிய பிறகு நாம் அதை காப்பாற்ற வேண்டியது கடமை” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இன்னொருவர் “கடைக்காரர் சீக்கிய மதத்தை சேர்ந்தவர் இல்லை என்றாலும் தர்பானின் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் நன்கு அறிந்தவர். அவருக்கு மரியாதை செலுத்துங்கள்” என்று அவரை புகழ்ந்து கூறியுள்ளார்.