
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் வந்து பார்வையிட்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை அமைச்சர் சாப்பிட அமர்ந்தார். இந்நிலையில் மதிய உணவாக வழங்கப்படும் குழம்பில் உருளைக்கிழங்கு இல்லாததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
அதோடு மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் பருப்பு குறித்து கவலைப்பட்டார். அவர் உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் மாவட்ட பஞ்சாயத்து பொது மேலாளரை அழைத்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு குறித்து விசாரித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
सब्जी में ‘आलू’ ढूंढते रह गए मंत्री जी..
MP: ऊर्जा मंत्री प्रद्युम्न सिंह तोमर सरकारी स्कूल में बने मिड-डे मील की गुणवत्ता को लेकर औचक निरीक्षण करने पहुंचे. इस दौरान मंत्रीजी भोजन करने बैठ गए. जब उन्हें मिड-डे मील में मिलने वाला खाना परोसा गया तो इसे देखकर दंग रह गए अब इसका… pic.twitter.com/cL9IOlxw4R
— NDTV MP Chhattisgarh (@NDTVMPCG) September 20, 2024