உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் புகழ்பெற்ற ராமர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பால ராமர் கருவூலத்தில் இருக்கிறார். இந்நிலையில் ராமர் சிலையின் நெற்றியில் உள்ள திலகத்தின் மீது திடீரென சூரிய ஒளி பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியதோடு ஆச்சரியத்தையும் உருவாக்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ராமர் கோவில் கட்டப்பட்ட நிலையில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் செல்கிறார்கள். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ராமநவமி திருவிழா அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது. அப்போது கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். அந்த சமயத்தில் தான் கருவறையில் வீற்றிருந்த ராமர் சிலையின் நெற்றியில் திடீரென சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு நிகழ்ந்தது. இதனைக் கண்ட பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டனர்.

இதைத் தொடர்ந்து ராமருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் நீண்ட நேரம் நெற்றியில் சூரிய ஒளி படும் நிகழ்வு . நடந்தது. சூரிய ஒளி கருவறைக்குள் நுழைய நேரடியாக வழியில்லை. ஆனால் கண்ணாடிகள் மற்றும் சூரிய ஒளி கருவறைக்குள் வருமாறு ஏற்பாடு செய்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.