
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தொழில் நகரங்களாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுவது சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் கோவையில் உள்ள விளாங்குறிச்சியில் எல்காட் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்து தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனை கடந்த 2020-ம் ஆண்டு அறிவித்தது.
இந்நிலையில் 4 ஆண்டு காலங்களாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணி தற்போது முடிவு பெற்றது. இந்த தொழில்நுட்ப பூங்கா 2.66 சதுர பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை வருகிற நவம்பர் 4-ம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.