தென்னிந்தியாவின் ரத்தினம் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆந்திர பிரதேசத்தின் மையப்பகுதியாக அமைந்துள்ளது. இங்கு அழகிய கடற்கரைகள், வளமான நிலப்பரப்பு நிறைந்த இடமாகும். விசாகப்பட்டினத்தில் ஒரு பகுதியான கைலாச கிரி மலை மற்றும் விசாகப்பட்டினம் நீல கடற்கரையை ஆந்திர மாநிலம் மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது ஸ்கை சைக்கிளிங் கொண்டுவரப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இயற்கையில் கொஞ்சம் கடற்கரை பகுதிகள் மற்றும் நிலப்பரப்பை முழுவதுமாக பார்வையிட தற்பொழுது பணிகள் தீவிர படுத்தப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்கை சைக்கிளின் மூலம் விசாகப்பட்டினத்தின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.