
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டிடம் தற்போது உலக அதிசயமான கட்டிடங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இதற்குக் காரணம் இந்த கட்டிடம் மிகப்பெரிய மீன் வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த கட்டிடத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் நீல நிறத்தில் ஜொலிக்கின்றன.
இந்த மீன் போன்ற அமைப்பில் மீனின் கண் அமைப்பிற்காக மிகப்பெரிய விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் இரவில் நகரின் நடுவே மிகப்பெரிய ராட்சத மீன் நீந்தி செல்வது போல காட்சியளிக்கும். இந்த கட்டிடத்தை “தி ஃபிஷ் பில்டிங்”என அழைப்பர். வித்தியாசமான கட்டிடக்கலைகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் ஹைதராபாத்தில் தனித்துவமான கட்டிடமாக பலராலும் பிரமிக்கப்பட்டு வருகிறது.