கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இசைத் துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் 5-10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது” என்று அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, “AI வளர்ச்சி அடைந்து வருகிறது, அதை கையாள தெரிந்தவர்கள் சம்பாதிக்க போகிறார்கள். ‘இசையால் மனிதர்கள் கொடுக்கும் உணர்வை AI-யால் கொடுக்க முடியாது’ என ஏ.ஆர். ரஹ்மான் கூறியதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த GOATதான் அந்த GOAT படத்துக்கு மியூஸிக் போட்டது” என்றும் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பம் இசைத் துறையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தான யுவன் ஷங்கர் ராஜாவின் இந்த கருத்து இசை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.