
இந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இவருக்கு சொந்தமான ஏ ஆர் ஆர் ஃபிலிம் ஃபேக்ட்ரி திருவள்ளூரில் அமைந்துள்ளது. சுமார் 7000 சதுர அடி பரப்பளவில் தற்போது புதிதாக யூஸ்ட்ரீம்ஸ் ஒன்றினை அவர் நிறுவியுள்ளார். அதன் திறப்புவிழா இன்று நடைபெற்ற நிலையில் ஏ ஆர் ரகுமான் மணிரத்னம், சுதா கொங்குரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்டுடியோவில் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் உள்ள நிலையில் ஏ ஐ தொழில் நுட்ப வசதிகளும் இருக்கிறது.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கூறியதாவது :
ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தற்போது சென்னையிலும் யூஸ்ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் மூலம் வந்துள்ளது இத்தொழில் நுட்பத்தை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி பிரம்மாண்டமான திரைப்படத்தை குறைந்த செலவில் எடுக்க வேண்டும். மேலும் இந்நிறுவனத்துடன் இணைந்து வி எஃப் எக்ஸ் சிஜிப்ரோ, ஏ ஐ தொழில்நுட்பத்துடன் விர்ச்சுவல் ப்ரொடக்ஷன் டெக்னாலஜி ஸ்டூடியோ தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளேன் எனக் கூறியுள்ளார்.