தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது ரூ.900 கோடி அளவுக்கு ஒரே நாளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. அதோடு 3500 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளும் இதன் மூலம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று google நிறுவனத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சென்றார்.

அங்கு தற்போது google நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வகங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏஐ ஆய்வகங்கள் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 செல்போன்களை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.