
ஏர்டெல் நிறுவனம், பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக புதிய காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தனது கட்டணங்களை உயர்த்தியதால், பயனர்கள் கவலைப்பட்ட நிலையில், இக்காப்பீடு திட்டம் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவலாக இருக்கிறது. இந்நிலையில், விபத்தில் உயிரிழப்போருக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இந்த காப்பீடு, ரூ.299, ரூ.399, மற்றும் ரூ.969 என 3 ரீசார்ஜ் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே பயனர்கள் புதிய காப்பீட்டு நிதியை பெற்றுக்கொள்ளலாம். இதை தொடர்ந்து, ஏர்டெல், பயனர்களின் நற்பெயரை மீட்டெடுக்கவும், புதிய பயனர்களை ஈர்க்கவும் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.