
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் ஏர்டெல்லில் ப்ரீபெய்டு இணைப்பு ரசிதை பெற தனி வசதி உள்ளது.
இதன் மூலமாக 6 மாத அழைப்பு, டேட்டா மற்றும் குறுந்தகவல் ரசிதை பெறலாம். இதற்கு உங்கள் ஏர்டெல் மொபைல் எண்ணிலிருந்து EPREBILL என்று டைப் செய்து பிறகு ரசீது தேவைப்படும் மாதத்தின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டு 121 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். (உதாரணமாக EPREBILL JUNE, உங்கள் மின்னஞ்சல் முகவரி) அதன் பிறகு ரசீது மின்னஞ்சலுக்கு வரும்.