இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேக் அக்லி என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். மேலும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இத்திரை படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இதில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா சுனில், நட்டி உள்ளிட்டோர் நடத்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் அஜித்தின் புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தற்போது மற்றொரு புதிய லுக்கில் இருக்கும் அஜித்தின் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதேபோல் கதாநாயகி த்ரிஷாவின் புகைப்படமும் வெளிவந்துள்ளது. இதில் இருவரையும் பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளதால் படமும் புது விதமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.