
நடிகர் அஜித்குமார் நடிக்கவிருந்த படம் ஏகே 62 . இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் திடீரென இப்படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியது. இந்த படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் கூறியுள்ளார். ஆனால் அது நடிகர் அஜித்திற்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் முழு திருப்தி தரவில்லை. மேலும் 8 மாதங்கள் கால அவகாசம் கொடுத்தும் கதை சரியில்லை என அவர் மீது லைக்கா நிறுவனம் கடும் கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இப்படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி இயக்கப் போவதாக ஒரு பக்கம் செய்திகள் வெளியாகிய நிலையில், இது பற்றி நயன்தாரா லைக்கா நிறுவனத்திற்கு போன் செய்து பேசியுள்ளார். ஆனால் லைக்கா நிறுவனம் தங்களுடைய முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை என கூறியது. மேலும் ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தனர். இதனையடுத்து விக்னேஷ் சிவன் அந்த அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லைக் செய்துள்ளார். இது ரசிகர்கள் அனைவரையும் குழப்பம் அடைய செய்துள்ளது.
