
அக்னி வீரர்கள் திட்டத்தில் முப்படையில் சேரும் வீரர்கள் 4 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இவர்களுக்கு பிற பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கென எல்லை பாதுகாப்பு படை சட்டம் 141வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து இதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகமானது வெளியிட்டு இருக்கிறது. அதோடு வேலைவாய்ப்பு வழங்கும் அடிப்படையில் வயது உச்சவரம்பிலும் தளர்வு அளிக்கப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அக்னி வீரர்களாக அதிகமானோரை உருவாக்கும் விதமாக மத்திய அரசு இந்த புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.