
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்றைக்கு படகுகளை இழந்து மீனவர்கள் தவிக்கின்ற தவிப்பு…. அவர்களுடைய வாழ்வாதாரமே இழந்து தவிக்கின்ற நிலைமைகளை உணர்ந்த தமிழக முதலமைச்சர் அவர்கள், கடந்த காலம் அதிலே பாதிக்கப்பட்ட படகுகள் எத்தனை என்று கணக்கெடுத்து, விசை படகுகளுக்கு 5 லட்சமும், நாட்டுப் படகுகளுக்கு ஒன்றரை லட்சமும் வழங்கினார்கள்.
இதெல்லாம் மீட்டு தருவேன்… மீட்டு தருவேன் என்று ஒன்றிய அரசாங்கத்தில் உள்ளவர்கள் சொன்னாலும்… அதை மீட்டு தருவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்ற நிலையில் இருக்கின்றார்கள். அந்த வகையில் மீனவர்கள் அத்தனை பேரும் நம்மை ஒன்றிய அரசாங்கம் ஏமாற்றுகின்றதே… மத்திய அதிகாரத்தில் இருப்பவர்கள்… BJPயினரும் இப்படி ஏமாற்றுகின்றார்களே என்று மீனவர்கள் ஏங்குகின்ற நிலை தான் தமிழ்நாட்டின் இருக்கின்றது.
நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர்….. பாராளுமன்ற குழுவின் தலைவராக இருக்கக்கூடிய டி.ஆர் பாலு இராமேஸ்வர பகுதியில் உள்ள மீனவர்களை அழைத்துக் கொண்டு… அந்த தொகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களோடு சென்று, அங்கு இருக்கக்கூடிய இணை அமைச்சரை சந்தித்து…. இதே மாதிரி நிலைகளை தடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.