
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 50-வது படத்தை தனுஷ் அவரே இயக்கி நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் சேர்ந்து எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வருவதால் தற்போது அவர் தனுஷ் படத்திலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேப்டன் மில்லர் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனுஷ் தான் 50-வது படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். லால் சலாம் மற்றும் தனுஷின் 50-வது படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் நடக்கும் என்று கூறப்படுவதால் அநேகமாக விஷ்ணு விஷால் தனுஷின் படத்திலிருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே மாட்டிக் கொண்டு விஷ்ணு விஷால் பாவம் முழிக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.