இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் பொதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கஷ்டம்ஸ் அதிகாரிகள் போல பேசி மோசடி செய்பவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென CBIC எச்சரித்துள்ளது. சமீப நாட்களாக செல்போன் வழியாக தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், தாங்கள் கஷ்டம்ஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக மிரட்டி மக்களிடம் பணம் பறித்து வருகிறார்கள். அதுபோன்ற அழைப்புகள் வந்தால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.