
உலகம் முழுவதும் தற்போது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் கூகுள் செயலிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது மத்திய கணினி உடனடி நடவடிக்கை குழு கூகுள் குரோம் மற்றும் ஆண்ட்ராய்டு போன் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதாவது chrome 129.0.6668.89 பிரவுசர்கள், ஆண்ட்ராய்டு 12, 12L, 13, 14,15 ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு குறைகளை பயன்படுத்தி செல்போனை ஹேக் செய்வதாக எச்சரிக்கை வந்துள்ளது. இதன் காரணமாக ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் chrome உள்ளிட்டவற்றை அப்டேட் செய்ய வேண்டும். மேலும் ஹேக்கர்கள் போனை ஹேக் செய்து தரவுகளை திருடக்கூடும் என்பதால் உடனடியாக அப்டேட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.